×

வரதட்சணையை ஒழிக்க புதிய முயற்சி! அரசு ஊழியர்களுக்கு ஓர் உத்தரவு

வரதட்சணையை ஒழிக்க கேரள அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாக அண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்ததன. அதன்படி, விஸ்மயா, சுசித்ரா உள்ளிட்ட மூன்று இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளாவில் அரசுப்பணியில் உள்ள ஆண்கள் திருமணம் முடிந்த கையோடு தந்தை, மனைவி, மாமனாரிடமிருந்து கையொப்பம் பெற்று வரதட்சணை வாங்காததற்கான உறுதிமொழி பத்திரத்தை சமர்பிக்க அம்மாநில அரசு உத்தரவு
 

வரதட்சணையை ஒழிக்க கேரள அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாக அண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்ததன. அதன்படி, விஸ்மயா, சுசித்ரா உள்ளிட்ட மூன்று இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளாவில் அரசுப்பணியில் உள்ள ஆண்கள் திருமணம் முடிந்த கையோடு தந்தை, மனைவி, மாமனாரிடமிருந்து கையொப்பம் பெற்று வரதட்சணை வாங்காததற்கான உறுதிமொழி பத்திரத்தை சமர்பிக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பத்திரத்தில் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, வற்புறுத்தவோ இல்லை என குறிப்பிட்டிருக்க வேண்டுமென பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் அனுபாமா தெரிவித்துள்ளார்.

இதனையும் மீறி வரதட்சணை பெற்றால், ரூ.15000 அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.