×

“எவன் உன்னை கெடுத்தான் ,குழந்தையை கொடுத்தான்” -ஒரு டாக்டரால் பாதித்த பிரசவத்திற்கு வந்த பெண்.

தவறான வழியில் ஒரு தாய் பெற்ற குழந்தையை, ஒரு அரசு டாக்டரும் நர்ஸுகளும் ஒரு நபரிடம் 55000 ரூபாய்க்கு விற்றதால் அரசு மருத்துவமனையில் இருப்போரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது கர்நாடக மாநிலம் சிவமொகாவின் தீர்த்தஹள்ளியில் வசிக்கும் கல்பனா என்ற பெண் கல்யாணம் செய்வதற்கு முன்பே தவறான உறவின் மூலம் கர்ப்பமானார் ,.அதனால் அவர் பிரசவத்திக்காக ஒரு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் .அங்கு பணியாற்றும் டாக்டர் பாலகிருஷ்ணா என்ற டாக்டர் அந்த பெண்ணுடன் யாரும் வராததை கவனித்தார் .அதனால் அவரும்
 


தவறான வழியில் ஒரு தாய் பெற்ற குழந்தையை, ஒரு அரசு டாக்டரும் நர்ஸுகளும் ஒரு நபரிடம் 55000 ரூபாய்க்கு விற்றதால் அரசு மருத்துவமனையில் இருப்போரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது


கர்நாடக மாநிலம் சிவமொகாவின் தீர்த்தஹள்ளியில் வசிக்கும் கல்பனா என்ற பெண் கல்யாணம் செய்வதற்கு முன்பே தவறான உறவின் மூலம் கர்ப்பமானார் ,.அதனால் அவர் பிரசவத்திக்காக ஒரு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார் .அங்கு பணியாற்றும் டாக்டர் பாலகிருஷ்ணா என்ற டாக்டர் அந்த பெண்ணுடன் யாரும் வராததை கவனித்தார் .அதனால் அவரும் அங்கு பணியாற்றும் சில நர்ஸுகளும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணிடம் அவரின் கர்ப்பத்திற்கு காரணமான கனவன் வரவில்லையா என்று கேட்டார்கள் .
அதற்கு அந்த பெண் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையென்றும், தவறான உறவால் கர்ப்பமானதாக கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த டாக்டர் அந்த பெண்ணுக்கு பிறக்க போகும் அந்த குழந்தையை விற்க திட்டமிட்டார் .அதனால் அந்த பெண்ணிடம் இப்படி தவறான முறையில் குழந்தை பெற்றால் போலீஸ் பிடித்து கொள்ளும் என்று பயமுறுத்தினார்கள் .அதனால் உனக்கு பிறக்க போகும் குழந்தையை தங்களிடம் கொடுத்து விடுமாறும் ,தாங்கள் போலீசுக்கு தெரியாமல் வேறுஒருவரிடம் விற்று விடுவதாகக் கூறினார்கள். அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவர்களின் கோரிக்கையை ஏற்றார்
அதன் படி அவருக்கு பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது .பின்னர் அந்த குழந்தையை பிரேமா என்ற பெண்ணிடம் அந்த டாக்ட்டரும் நர்ஸுகலும் சேர்ந்து 55000 ரூபாய்க்கு விற்றார்கள் .ஆனால் அந்த குழந்தையின் தாய்க்கு வெறும் 5000 ரூபாய்தான் கொடுத்தார்கள் .
அதனால் அந்த பெண் போலிஸுக்கு போக முடிவு செய்தார் .அவர் போலீசில் அந்த டாக்டர் மற்றும் சில நர்ஸுகள் மீது புகார் கூறினார் .போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பின்னர் குழந்தையை தாய் கல்பனாவிடம் ஒப்படைத்தார்கள்.