×

கூகுள் பே பணப்பரிவர்த்தனை பாதுகாப்பானதா? வெளியான பகீர் தகவல்

சமீப காலமாக அனைத்திற்கும் கூகுள் பே தான். நண்பர்களுக்குப் பணம் அனுப்புவது, போனுக்கு ரரீச்சார்ஜ் செய்து கொள்வது, கரண்ட் பில் கட்டுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளதால் இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அதிகமாக உபயோகிக்கும் பயணாளிகளுக்கு அவ்வப்போது ரூ.10 முதல் 100 வரை சன்மானமாக வழங்கி வருகிறது. அதே போல, இந்த ஆப்-ஐ நாம் மற்ற நபர்களுக்கு ஷேர் செய்து, அதன் மூலம் அவர்கள் கூகுள் பே பதிவிறக்கம் செய்தால் ரூ.50
 

சமீப காலமாக அனைத்திற்கும் கூகுள் பே தான். நண்பர்களுக்குப் பணம் அனுப்புவது, போனுக்கு ரரீச்சார்ஜ் செய்து கொள்வது, கரண்ட் பில் கட்டுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளதால் இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அதிகமாக உபயோகிக்கும் பயணாளிகளுக்கு அவ்வப்போது ரூ.10 முதல் 100 வரை சன்மானமாக வழங்கி வருகிறது. அதே போல, இந்த ஆப்-ஐ நாம் மற்ற நபர்களுக்கு ஷேர் செய்து, அதன் மூலம் அவர்கள் கூகுள் பே பதிவிறக்கம் செய்தால் ரூ.50 ரூபாய் நமக்கு சன்மானம் கிடைக்கும். இது போல பல சலுகைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. இதனால் இளைஞர்களுக்கு மிக பிடித்தமான செயலிகளின் வரிசையில் கூகுள் பேவும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் செல்போன் மூலமாக கூகுள் பே செயல் பட்டுவந்த நிலையில் அது அங்கீகரிக்கப்படாதது என்று செய்திகள் பரவியதற்கு அந்நிறுனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ள அறிவிப்பில், “கூகுள் பே மூலம் செயல்படும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும், ரிசர்வ் வங்கி தேசியப் பணப்பட்டுவாடா கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி பாதுக்காப்பாகவும், முறையாகவும் செயப்பட்டுவருகிறது. மேலும் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் கூகுள் பே இயங்கி வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.