×

தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் செயலாளரிடம் ஒன்பது மணி நேர விசாரணை!

தங்கம் கடத்தல் தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேரளாவை அதிர வைக்கும் அளவுக்கு தங்கக் கடத்தல் விவகாரம் வெளியானது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் வரை தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தேசிய புலாய்வு முகமை இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
 

தங்கம் கடத்தல் தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரளாவை அதிர வைக்கும் அளவுக்கு தங்கக் கடத்தல் விவகாரம் வெளியானது.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் வரை தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தேசிய புலாய்வு முகமை இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை ஒன்பது மணி நேரம் வரை இந்த விசாரணை நீடித்துள்ளது. அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.


அதைத் தொடர்ந்து சிவசங்கரனை சுங்கத் துறையினர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்களுக்கும் உள்ள தொடர்பு, செய்த உதவிகள் பற்றி சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.