நான் கூறியதை மக்கள் கேட்டதால் தங்கம் விலை குறைந்துள்ளது - பிரதமர் மோடி
கடந்த ஆண்டு தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 5-வது தேசிய திறன் மேம்பாட்டு பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "ஒரு வருடத்திற்கு முன்பு, தேவையில்லையென்றால் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டேன். லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது மக்கள் ஒருவேளை உணவைத் தவிர்த்ததைப் போல, தங்கம் வாங்குவதையும் குறைக்குமாறு கேட்டுக்கொண்டேன். தங்கம் வாங்க வேண்டாம் என நான் கூறியதை கேட்டு மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால் தற்போது அதன் விலை குறைந்துள்ளது. இன்று மக்கள் என்னிடம், 'நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள் பணத்தைச் சேமித்தோம்' என்று கூறுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும், திறமை கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை யாராலும் பறிக்க முடியாது. சான்றிதழ்களைக் காட்டிலும் திறமைக்கு இனி அதிக மதிப்பு கிடைக்கும், 2027-ம் ஆண்டு WorldSkills போட்டியை இந்தியா நடத்தும். இந்தியா திறன் மேம்பாட்டின் தலைநகராக மாறி வருவதாக லக்னோவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பெருமிதம். கடந்த 10 ஆண்டுகளில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பங்கேற்பு இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. நான் சொல்வதை குறித்து வைத்து கொள்ளுங்கள். காலம் மாறிக் கொண்டிருக்கிறது. கோட், பேண்ட், டை அணிந்துகொண்டு வெறும் காகித சான்றிதழ்களுடன் வலம் வருபவர்களை விட உண்மையான கைதொழில் மற்றும் திறன் கொண்டவர்களுக்கே இனி அதிக மதிப்பு கிடைக்கும் " என்றார்.