×

காங்கிரஸ் கட்சியை ரத்தத்தினால் உருவாக்கினோம்! கணினியாலோ அல்லது டுவிட்டராலோ உருவாக்கவில்லை- குலாம் நபி ஆசாத்

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத் ஜம்முவில் நடந்த முதல் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.   தொடர்ந்து இன்றைய தினம் ஜம்முவில் சைனிக் காலணியில்  பொதுக்கூட்டம் ஒன்றில்  உரையாற்றினார். அப்போது பேசிய குலாம்நபி ஆசாத் 50 ஆண்டுகால காங்கிரஸ் கட்சி உடனான தன்னுடைய உறவை சமீபத்தில் முறித்துக் கொண்டதாகவும், ஜம்மு காஷ்மீர் தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஜம்மு காஷ்மீர் மக்களை முடிவு செய்வார்கள் என அக்கூட்டத்தில் அறிவித்தார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு தான் ஆரம்பிக்கப் போகும் கட்சி பாடுபடும் எனவும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு , பூர்வகுடி மக்களுக்கு முன்னுரிமை என்பதை நிலைநாட்டப்படும் எனவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை தங்களுடைய ரத்தத்தால் உருவாக்கியதாகவும் மாறாக கணினியாலோ அல்லது ட்விட்டரில் கட்சியை உருவாக்கவில்லை எனவும் ஆனால் இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் குற்றம் சாட்டுவதாகவும் அதனை மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தீர்க்கப்படாமல் கணினி வாயிலாகவும் ட்விட்டர் வாயிலாகவும் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதால் அடிமட்டத்தில் காங்கிரஸ் கட்சியை காண முடியவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசினார்.