×

புதைக்கப்படும் கொரானா நோயாளிகள் – தோண்டியெடுக்கும் கும்பல் -என்ன செஞ்சாங்க தெரியுமா ?

இறந்த கொரானா நோயாளிகள் கல்லறைகளில் இருந்து உடைகள் மற்றும் பிற பொருட்களை திருடி விற்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் பலர் இறந்து போகின்றனர் . அப்படி இருப்போரின் பிணங்களை அடக்கம் செய்ய முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர் .பலர் மிகுந்த சிரமப்பட்டு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்து விட்டு போகிறார்கள் .அப்பிடி அடக்கம் செய்யப்படும் பிணங்களை ஒரு கும்பல் இரவு
 

இறந்த கொரானா நோயாளிகள் கல்லறைகளில் இருந்து உடைகள் மற்றும் பிற பொருட்களை திருடி விற்ற  7 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள  பாக்பத் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையால் பலர் இறந்து போகின்றனர் . அப்படி இருப்போரின் பிணங்களை அடக்கம் செய்ய முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர் .பலர் மிகுந்த சிரமப்பட்டு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்து விட்டு போகிறார்கள் .அப்பிடி அடக்கம் செய்யப்படும் பிணங்களை ஒரு கும்பல் இரவு நேரங்களில் தோண்டி எடுத்துள்ளது .பின்னர் அந்த கூட்டம் அந்த பிணைகளிலிருக்கும் உடைகள் மற்றும் பல விவலியுறந்த பொருட்களை களவாடி அவற்றை சந்தையில் விற்று பணம் சம்பாதித்துள்ளது .இது பற்றி இறந்து போனவர்களின் உறவினர்கள் சிலர் சந்தேகப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .அப்போது போலீசார் ரகசியமாக கண்காணித்து இப்படி பிணங்களிலிருந்து துணிகளை திருடிய பிரவீன் குமார் ஜெயின், ஆஷிஷ் ஜெயின், ஷ்ரவன்குமார் சர்மா, ரிஷாப் ஜெயின், ராஜு சர்மா, பாப்லூ மற்றும் ஷாருக் என்ற ஏழு பேரை கைது செய்தனர் .

அவர்களிடமிருந்து 520 பெட்ஷீட்டுகள் , 127 குர்தாக்கள், 140 சட்டைகள், 34 தோத்திகள், 52  புடவைகள், குவாலியர் நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் போன்றவற்றையும் போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த குற்றாவளிகள்  திருடப்பட்ட துணிகளை  துவைத்து  சலவை செய்த பிறகு சந்தைகளில் விற்பனை செய்வார். அப்போது திருடப்பட்ட துணிகளில் போலியான பிராண்டட் ஸ்டிக்கரையும்  ஒட்டினர்.