×

வீட்டு ஓனரை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்! அதிர வைக்கும் காரணம்

 

தங்கத்திற்காக வீட்டு உரிமையாளர் கொலை செய்து உடலை ஆந்திராவிற்கு எடுத்துச் சென்று கோதாவரி ஆற்றில் வீசிய கேப் டிரைவரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலம்  அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், பெரவாலி மண்டலம், கோத்தப்பள்ளியைச் சேர்ந்த எம். அஞ்சிபாபு (33). சில மாதங்கள் முன்பு தெலங்கானா மாநிலன் ஐதராபாத் வந்தார். அங்கு டாக்ஸி கேப்  டிரைவராக  பணிபுரிந்து கொம்டு  ஐதராபாத்  மல்லப்பூர் பாபாநகரில் உள்ள சுரெட்டி சுஜாதா (65) என்பவரின் வீட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வீட்டின் உரிமையாளர் சுஜாதாவின் கணவர் மற்றும் மகன்கள் இறந்துவிட்டதால் சுஜாதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை கண்காணித்த  அஞ்சிபாபு அவரது பார்வை சுஜாதா அணிந்திருந்த தங்க நகைகள் மீது விழுந்தது. இதனால் சுஜாதாவை கொலை செய்து நகைகளை எடுக்க முடிவு செய்து இந்த மாதம் 19 ஆம் தேதி இரவு சுஜாதா வீட்டிற்கு வாடகை கொடுப்பது போல் சென்று அவரை   கொலை செய்து அவர், அணிந்திருந்த  16 சவரன்  தங்க நகைகளை எடுத்து கொண்டு உடலை வீட்டில் பூட்டி வைத்தான். 

பின்னர் நடந்ததை அவன் தன் நண்பர்களான கண்டவள்ளியைச் சேர்ந்த யுவராஜு (18) மற்றும் அமலாபுரம் மண்டலம் வேமாவரம் கிராமத்தைச் சேர்ந்த துர்கா ராவ் (35) ஆகியோரிடம் கூறி அவருக்கு உதவி செய்தால் பணம் தருவதாக தெரிவித்தான். அவர்களும் சம்மதம் தெரிவித்ததால் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.பின்னர்  இந்த மாதம் 20 ஆம் தேதி, மூவரும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து மல்லப்பூருக்குத் திரும்பினர். பின்னர் சுஜாதா உடலை காரில் வைத்து கொண்டு கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணலங்காவுக்கு எடுத்துச் சென்று கோதாவரி ஆற்றில் வீசினர். இந்தநிலையில் சுஜாதாவின் தங்கை மொய்னாபாத்தில் சுவர்ணலதா, இந்த மாதம் 24-ஆம் தேதி வீட்டிற்கு வந்தபோது ​​சுஜாதாவைக் காணவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில்  போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த அஞ்சிபாபுவும் சில நாட்களாக வரவில்லை என தெரிய வந்ததால் அவரது செல்போன் எண்ணை ஆதாரமாக வைத்து கைது செய்து விசாரித்தபோது ​​குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து மூவரையும் கைது செய்த நாச்சரம் போலீசார் சுஜாதா உடலைத் தேடி ஆந்திராவில் உள்ள ராஜோலுக்குச் சென்றனர். அங்குள்ள கோதாவரி நதியில் ஒரு உடலைத் தேடி வருகின்றனர்.