×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்விளைவால் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை
 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்விளைவால் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.