ஒரே வாரத்தில் கட்சியிலிருந்து அம்பத்தி ராயுடு விலகல்
Jan 6, 2024, 12:26 IST
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக ராயுடு அறிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு கடந்த வாரம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் YSR காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு டிச.28ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் YSR காங்கிரஸில் இணைந்த அம்பத்தி ராயுடு, ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் அக்கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.