×

அசாமின் முன்னாள் முதலமைச்சர் காலமானார்!

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் காலமானார். அவருக்கு வயது 86 தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் வீடு திரும்பினார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் செயற்கை சுவாசக் கருவி
 

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் காலமானார். அவருக்கு வயது 86

தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் வீடு திரும்பினார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குவாஹாட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட சூழலில் தருண் கோகோய், இன்று மாலை 5.34 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

தருண் கோகாய் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.