×

வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியதன் முதன் காரணம், வெளிநாட்டவர்கள் இந்தியா வந்தது தான். கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இத்தாலியில் இருந்து வந்த நபர்களாலும் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவர்களாலும் கொரோனா பரவத் தொடங்கியது. அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு வெளிநாட்டவர்கள் இந்தியா வரத்
 

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியதன் முதன் காரணம், வெளிநாட்டவர்கள் இந்தியா வந்தது தான். கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இத்தாலியில் இருந்து வந்த நபர்களாலும் சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவர்களாலும் கொரோனா பரவத் தொடங்கியது.

அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு வெளிநாட்டவர்கள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டது. அதே போல, இந்தியர்களும் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே வெளிநாடு வாழ் இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா, எலக்ட்ரானிக், மருத்துவம் தவிர மற்ற விசாக்கள் மூலம் இந்தியா வர அனுமதி வழங்கப்படுவதாகவும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.