×

FOR SALE – இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் 20 லட்சம்! விளம்பர போர்டு வைத்து அதிர்ச்சி ஏற்படுத்திய பெண்!

’FOR SALE: இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் …’ என்று போர்டு வைத்துவிட்டு அதற்கு பக்கத்திலேயே ஒரு பெண் உட்கார்ந்திருந்தது கண்டு அதிர்ந்தனர் வரப்புழா மக்கள். கேரள மாநிலம் கொச்சினில் உள்ள வரப்புழாவில் சாலையோரம் கூடாரத்தில் வாழும் சாந்தி என்கிற பெண் தான் அப்படி ஒரு விளம்பர போர்டை வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தது. கணவனைப்பிரிந்து நான்கு மகன்கள், மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சாந்தி. வாடகை கொடுக்க முடியாத சூழலால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யச்சொல்லிவிட்டதால் சாலையோரத்தில்
 

’FOR SALE: இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் …’ என்று போர்டு வைத்துவிட்டு அதற்கு பக்கத்திலேயே ஒரு பெண் உட்கார்ந்திருந்தது கண்டு அதிர்ந்தனர் வரப்புழா மக்கள்.

கேரள மாநிலம் கொச்சினில் உள்ள வரப்புழாவில் சாலையோரம் கூடாரத்தில் வாழும் சாந்தி என்கிற பெண் தான் அப்படி ஒரு விளம்பர போர்டை வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தது.

கணவனைப்பிரிந்து நான்கு மகன்கள், மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சாந்தி. வாடகை கொடுக்க முடியாத சூழலால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யச்சொல்லிவிட்டதால் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.

மூத்த மகன் 25 வயதான ராஜேஷுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மூளை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. 23 வயதாகும் இளையமகன் ரென்ஜித்துக்கு வயிற்றில் கட்டி இருந்த சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலும் மருத்துவ சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. இதுபோக,
நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட மகளின் அறுவை சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது.

கொரோனாவினால் 21 வயதான சுஜித்திற்கு திரையரங்க வேலை போய்விட்டது. சாந்திக்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் செய்து வந்த வேலை போய்விட்டது.
இந்த நெருக்கடியான சூழலில் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யச்சொல்லிவிட்டதால், சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடன்காரர்கள் நெருக்கடி கொடுப்பதாலும் 20 லட்சம் தேவை இருந்தது. இதனால் தனது இதயம் உள்ளிட்ட உறுப்புகளை விற்க முடிவெடுத்து போர்டு வைத்துள்ளார்.

இதை அறிந்த சில தன்னார்வ அமைப்புகளின் உதவியினால் மீண்டும் சாந்தி வாடகை வீட்டில் அமர்ந்தப்பட்டிருக்கிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா, மருத்துவ செலவுகளை அரசு கவனித்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்க்கு அரசின் உதவியுடன் நிரந்தர வீடு கிடைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.