வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.க்கு பளார் என அறைவிட்ட பெண் - வைரல் வீடியோ
Jul 13, 2023, 11:51 IST
அரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வை ஒரு பெண் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் இதுவரை சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளனர். இதேபோல் பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.