நேபாளத்தில் மீண்டும் பெரு வெள்ளம்- வீடுகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்ட பகீர் காட்சி
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், புத்திகண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் கோர காட்சிகள் வெளியாளியுள்ளது.
#WATCH | நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், புத்திகண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீரெ வெள்ளப்பெருக்கின் கோர காட்சிகள்
— Sun News (@sunnewstamil) October 11, 2026
ஆற்றுப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கரையோர மக்கள்… pic.twitter.com/tLeD3FwPzV
இன்று காலை வடக்கு கோர்காவில் புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பல வீடுகளையும் பாலங்களையும் அடித்துச் சென்றது. இதனால் குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆற்றுப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரையோர மக்கள் உடனே பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல நேபாள அரசு அறிவுறுத்தியுள்ளது. சியுரிபாஸுக்கு மேலே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட அறிக்கைகள் குறிப்பிடுவதாக கோர்காவின் தலைமை மாவட்ட அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா தெரிவித்தார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். அதிகாலை 4 மணியளவில் ஓடைகளிலிருந்து எழுந்த பலத்த இரைச்சலைக் கேட்ட பிறகு, சும்லிங் மற்றும் லோக்பா உள்ளிட்ட ஆற்றங்கரை குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். உள்ளூர் ஹோட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும் வெளியேறினர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “அதிகாலையிலேயே வெள்ளம் வந்துவிட்டது, எங்களால் எங்கள் உடைமைகளைக்கூட வெளியே எடுக்க முடியவில்லை, வெள்ளம் வரப்போகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்” என்றார்.