×

புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!

புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக திரையரங்குகள் நாடு முழுவதும் மூடப்பட்டு கிடந்தது. தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமலுக்கு வருவதால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக இடைவெளியை பின்பற்றி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக புதுச்சேரி திருவள்ளூர் சாலையில் இயங்கி
 

புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்படுகின்றன.

ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக திரையரங்குகள் நாடு முழுவதும் மூடப்பட்டு கிடந்தது. தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமலுக்கு வருவதால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக இடைவெளியை பின்பற்றி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக புதுச்சேரி திருவள்ளூர் சாலையில் இயங்கி வரும் இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஒரு திரையரங்கம் டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளது. இதேபோல் மக்களின் வருகை அதிகரிக்க திரையரங்குகள் கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன