பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரபல யூடியூபரும் பிக்பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் உள்ள யூடியூபர் எல்விஷ் யாதவின் வீட்டிற்கு, இன்று அதிகாலை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சுமார் 10 -12 முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகிறது. குடும்பத்தினரின் புகாரின் பேரில் விரைவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.