×

கேரள தலைமைச் செயலகத்தில் தீவிபத்து… தங்கக் கடத்தல் வழக்கு ஆவணங்களை எரிக்க சதி?

கேரள தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை அழிக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள தலைமைச் செயலகத்தில் நேற்று சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. பொது நிர்வாகத் துறை செக்ஷன் இரண்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. என்றாலும் இந்த தீவிபத்து குறித்த சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இது தொடர்பாக கூறுகையில், “தங்க கடத்தல் வழக்கில் முக்கிய
 


கேரள தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை அழிக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைமைச் செயலகத்தில் நேற்று சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது.

பொது நிர்வாகத் துறை செக்‌ஷன் இரண்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. என்றாலும் இந்த தீவிபத்து குறித்த சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.
கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இது தொடர்பாக கூறுகையில், “தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க

தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து முதல்வர் பினராயி விஜயனின் ஆதரவுடன் நடந்திருக்கும்” என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தீவிபத்து பொது நிர்வாகத் துறை பிரிவில் ஏற்பட்டுள்ளது. இங்குதான் வெளிநாட்டு பயணங்கள், அரசு ரீதியான அனுமதிகள் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை கேட்டிருந்த நிலையில் தீவிபத்து நடந்துள்ளது.

இந்த சதி திட்டத்தின் மூலம் பினராயி விஜயன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் அழித்துவிட்டதாகவே தெரிகிறது” என்றார். கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரனும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது. சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அது அணைக்கப்பட்டுவிட்டது.

மேலும், இங்கு முழுக்க முழுக்க இ-பைல் திட்டம் செயல்முறையில் உள்ளது. எல்லா கோப்பும் மின்னணு முறையில் பாதுகாப்பாக உள்ளது. எந்த ஒரு கோப்பையில் டிஜிட்டல் முறையில் பார்க்கும் வசதி உள்ளது. எனவே, கோப்புகள் அழிக்கப்பட்டன என்பது அர்த்தமற்ற பேச்சு” என்று கூறியுள்ளது.