×

பெரும் பதற்றம்... டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கர தீ விபத்து

 

ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI-315 என்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI-315 என்ற ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானம் டெல்லிக்கு வந்து தரையறங்கி பார்க்கிங் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் APU பகுதியில் தீப்பிடித்துள்ளது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்த சமயத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறியுள்ளது. விமான பயணிகள், விமான சிப்பந்திகள், விமானிகள் ஆகியோர் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானித்தின் துணை மின் அலகில் ஏற்பட்ட தீ விபத்தில், விமானத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தானியங்கி முறையில் தீ அணைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.