×

அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்கு!மகளிர் காவலரை தாக்கியதால் விபரீதம்

2018-ம் ஆண்டு நடந்த தற்கொலை வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும்
 

2018-ம் ஆண்டு நடந்த தற்கொலை வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ள மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குள் இன்று அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்தனர். கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி கோரியுள்ளது. இதனிடையே மும்பையில் உள்ள இல்லத்திற்கு சென்று கைது செய்ய முயன்றபோது மகளிர் காவலரை தாக்கியதாக ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.