×

நாட்டு மக்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1.30 லட்சம் கொடுக்கிறதா மத்திய அரசு? – உண்மை நிலை என்ன?

நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை விட வதந்திகள் மின்னல் வேகத்தில் பரவுகின்றன. நாளொரும் வாட்ஸ்அப் பார்வேர்டு பொழுதொரு வதந்தி என்பது போல இணையத்தில் வதந்திகள் வட்டமடிக்கின்றன. தகவல் தொழில்நுட்பங்கள் வளர வளர வதந்திகளும் சேர்ந்தே வளர்கின்றன என்றே சொல்ல வேண்டும். கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் இந்த வதந்தி பரப்புபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை. தற்போது புதிதொரு வதந்தியைக் கிளப்பியிருக்கிறார்கள். அதாவது மத்திய நிதியமைச்சகம் அனைவருக்கும் மாதம் 1.30 லட்சம் ரூபாய்
 

நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை விட வதந்திகள் மின்னல் வேகத்தில் பரவுகின்றன. நாளொரும் வாட்ஸ்அப் பார்வேர்டு பொழுதொரு வதந்தி என்பது போல இணையத்தில் வதந்திகள் வட்டமடிக்கின்றன. தகவல் தொழில்நுட்பங்கள் வளர வளர வதந்திகளும் சேர்ந்தே வளர்கின்றன என்றே சொல்ல வேண்டும். கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் இந்த வதந்தி பரப்புபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

தற்போது புதிதொரு வதந்தியைக் கிளப்பியிருக்கிறார்கள். அதாவது மத்திய நிதியமைச்சகம் அனைவருக்கும் மாதம் 1.30 லட்சம் ரூபாய் அவசரகால பயன்பாட்டுக்காக தருவதாகவும் இந்த பணம் மொத்தம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியதாக அந்த தகவல் பரவுகிறது. மொத்தமாக 7.8 லட்சம் கிடைக்கும் என்று சொல்லும் வாட்ஸ்அப் பார்வேர்டு மெசெஜில் ஒரு லிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று உங்களது தகவல்களைக் கொடுத்தால் பணத்தை மத்திய அரசு உங்கள் கணக்கில் போட்டுவிடும் என்றும் சொல்கிறது.

இதனை நம்பி பலரும் லிங்கில் தங்களது தகவல்களைப் பகிர்கின்றனர். இது ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையலாம். ஏனென்றால் உங்களது தகவல்களைத் திருடி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கக் கூட இவ்வாறு செய்யலாம். இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை நிறுவனமான Press Information Bureau விளக்கம் கொடுத்துள்ளது. இதுதொடர்பான எந்தவொரு திட்டத்தையும் மத்திய நிதியமைச்சகம் முன்மொழியவில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வதந்தி.

அரசிடமிருந்து ஒவ்வொரு திட்டம் பற்றிய தகவலும் முதலில் அமைச்சகத்தால் வெளியிடப்படும். வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டமும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காணக்கிடைக்கும். அங்கே இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்டு பின்னர் இதுபோன்ற செய்திகளைப் புறந்தள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. நீங்கள் ஏதேனும் போலி செய்திகளின் வலையில் விழுந்தால் லாபத்திற்கு பதிலாக பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.