×

#BREAKING UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

 

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் ‘வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026' மக்களவையில் நிறைவேறியது. இதன்மூலம் இனி UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பிறசேவை வழங்குநர்களால் கட்டணம் விதிக்க முடியும். இருப்பினும் இந்த கட்டணம், தனி நபர்களுக்கு பொருந்தாது. நுகர்வோர்- நிறுவனம், நிறுவனம்- நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.


எதிர்காலத்தில் அதிக மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் MDR (Merchant Discount Rate) சட்டரீதியான வழிவகை செய்யப்பட்டுள்ளது. MDR கட்டணத்தை வங்கிகள் வணிகர்களிடம் வசூலிக்கலாம், அதன் தாக்கம் மறைமுகமாக வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படலாம். பெரிய மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR கட்டணம் விதிக்கப்படலாம். சிறிய வணிகர்களின் UPI பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது MDR கட்டணம் அமலில் இல்லை, எவ்வளவு கட்டணம்? எப்போது நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பின்னர் மத்திய அரசு முடிவு செய்யும்.