×

செக் பவுன்சுக்கு கிரிமினல் வழக்கு இல்லை என மத்திய அரசு முடிவு! – வங்கிகள் எதிர்ப்பு

வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை பவுன்ஸ் ஆனால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதை ரத்து செய்ய மத்திய அரசு செய்துள்ளது. இதற்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய நிதி அமைச்சகம் வங்கி காசோலை பவுன்ஸ் தொடர்பாக புதிய பரிந்துரையை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதில் செக் பவுன்ஸ் ஆன விஷயத்துக்கு எல்லாம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியிருந்தது. இதற்கு வங்கிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடன்
 

வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை பவுன்ஸ் ஆனால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதை ரத்து செய்ய மத்திய அரசு செய்துள்ளது. இதற்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


மத்திய நிதி அமைச்சகம் வங்கி காசோலை பவுன்ஸ் தொடர்பாக புதிய பரிந்துரையை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதில் செக் பவுன்ஸ் ஆன விஷயத்துக்கு எல்லாம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியிருந்தது. இதற்கு வங்கிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் நடவடிக்கை

எடுக்காவிட்டால், கடன் தவணை செலுத்தாமல் விடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துவிடும். எனவே, நிதி அமைச்சகம் தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சட்டத்தின் படி, ஒருவர் வழங்கும் காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அந்த காசோலையின் மொத்த மதிப்பில் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வழிவகை உள்ளது. செக் பவுன்ஸ் ஆனாலே செக் மோசடி என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான சினிமா, அரசியல் பிரபலங்கள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்குவது குறிப்பிடத்தக்கது.