×

“மகனுக்கு 18 வயது ஆகிவிட்டாலே தந்தையின் கடமை முடிந்துவிடாது” – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மகனுக்கு 18 வயது பூர்த்தியடைந்துவிட்டாலே ஒரு தந்தையின் கடமை முடிந்துவிட்டது என ஆண்கள் இருந்துவிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகனின் கல்விச் செலவையும் அவர் வேலையில் சேரும் வரையிலான பராமரிப்பு செலவுகளை தாய் என்ற பெண்ணிடம் மட்டுமே சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளது. விவாகரத்து பெற்று கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண் ஒருவரின் மேல் முறையீட்டு வழக்கின்போது நீதிமன்றம் இதனை தெரிவித்தது. மனுதாரரான அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கு 1997ஆம் ஆண்டு
 

மகனுக்கு 18 வயது பூர்த்தியடைந்துவிட்டாலே ஒரு தந்தையின் கடமை முடிந்துவிட்டது என ஆண்கள் இருந்துவிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகனின் கல்விச் செலவையும் அவர் வேலையில் சேரும் வரையிலான பராமரிப்பு செலவுகளை தாய் என்ற பெண்ணிடம் மட்டுமே சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளது. விவாகரத்து பெற்று கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண் ஒருவரின் மேல் முறையீட்டு வழக்கின்போது நீதிமன்றம் இதனை தெரிவித்தது.

மனுதாரரான அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கு 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது மகனுக்கு 20 வயதும் மகளுக்கு 18 வயதும் பூர்த்தியடைந்துள்ளன. அந்தப் பெண் தனியாகவே தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் வருமானம் ஈட்ட முடியவில்லை. இதனால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை.

இதையடுத்து 2018ஆம் ஆண்டு தனது வாழ்க்கை செலவுக்காகவும் மகன், மகளின் படிப்புச் செலவுக்காகவும் கணவன் இழப்பீடு தொகை வழங்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாழ்க்கை செலவுத் தொகையை வழங்க உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டது. பின்னர் அப்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்போது நீதிமன்றம், “மகன் 18 வயதை எட்டும்போது தந்தையின் பொறுப்பு முடிந்துவிடும் என்றோ அவனது கல்வி மற்றும் பிற செலவுகளின் முழு சுமையும் தாயின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்றோ சொல்லிவிட முடியாது. உயர்ந்துவரும் விலைவாசிகளால் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகளைக் கண்டும் காணாமல் நீதிமன்றத்தால் இருக்க முடியாது. விவாகரத்து பெற்றால் மொத்த பண சுமையையும் தாய் மட்டுமே சுமப்பார் என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. ஆகவே மகன் பட்டப்படிப்பை முடிக்கும் வரை இடைக்கால பராமரிப்பு செலவாக மாதத்திற்கு 15,000 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.