×

‘விவசாயிகள் போராட்டம்’ டெல்லியில் 144 தடை உத்தரவு!

டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை தொடங்கினர். டெல்லியில் விவசாயிகள் முகாமிட்ட நாள் முதலே, மக்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தார்கள். அதுமட்டுமில்லாமல், பல்வேறு மாநில முதல்வர்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன் படியே, டெல்லியின் எல்லைக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைந்த போது மக்கள் மலர் தூவி
 

டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை தொடங்கினர். டெல்லியில் விவசாயிகள் முகாமிட்ட நாள் முதலே, மக்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தார்கள். அதுமட்டுமில்லாமல், பல்வேறு மாநில முதல்வர்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன் படியே, டெல்லியின் எல்லைக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைந்த போது மக்கள் மலர் தூவி அனுப்பி வைத்தனர்.

இத்தகைய சூழலில் தான், திடீர் வன்முறை வெடித்தது. அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே பேரணியை தொடங்கி விட்டதாக காரணம் சொல்லிய டெல்லி போலீசார், விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரின் தடையை தகர்த்து முன்னேறிச் சென்று செங்கோட்டையை முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் துண்டிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.