×

பிரபல குச்சிபுடி கலைஞர் ஷோபா நாயுடு காலமானார்!

பிரபல குச்சிபுடி கலைஞரும் ஆசிரியருமான பத்மஸ்ரீ ஷோபா நாயுடு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64. இந்தியாவின் முன்னணி குச்சிபுடி நடனக் கலைஞர்களில் ஒருவர் ஷோபா நாயுடு. குச்சிபுடியில் தேர்ச்சி பெற்ற இவர் இளம் வயதிலேயே நடன-நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடனமாடத் தொடங்கினார். அத்துடன் வெளிநாடுகளில் நடந்த நடனம், நாடக நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனிக்கலைஞராக வலம் வந்தார். ஐதராபாத்தில் குச்சிபுடி பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில்
 

பிரபல குச்சிபுடி கலைஞரும் ஆசிரியருமான பத்மஸ்ரீ ஷோபா நாயுடு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.

இந்தியாவின் முன்னணி குச்சிபுடி நடனக் கலைஞர்களில் ஒருவர் ஷோபா நாயுடு. குச்சிபுடியில் தேர்ச்சி பெற்ற இவர் இளம் வயதிலேயே நடன-நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடனமாடத் தொடங்கினார். அத்துடன் வெளிநாடுகளில் நடந்த நடனம், நாடக நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனிக்கலைஞராக வலம் வந்தார். ஐதராபாத்தில் குச்சிபுடி பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஷோபா நாயுடு மூளை இரத்தப்போக்கு காரணமாக ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கன்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு ஷோபா நாயுடு நள்ளிரவு 1.44 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு குச்சிபுடி கலை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு.

80 தனி நடனங்கள், 15 குழு நடனங்கள் ஆகியவற்றை நிகழ்த்தியுள்ள இவர் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இவர் பத்ம ஸ்ரீ விருது , 1991 ஆம் ஆண்டில் மத்திய சங்க நாடக கலா அகாடமியின் விருது, 1991இல் மும்பையின் சிருங்கார சம்சாத் வழங்கிய “நிருத்யாவிகார்” விருது, 1996இல் சென்னை, நுங்கம்பாக்கம் கலாச்சார சங்கத்தில், “நிருத்யா கலா சிரோமணி” என்ற பட்டம் போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இருப்பினும் இவர் திரைத்துறைக்கு வரவில்லை.

இந்தியா மட்டுமில்லாது அமெரிக்கா ,இங்கிலாந்து, சிரியா, துருக்கி, ஆங்காங், பாக்தாத், கம்பூச்சியா, மற்றும் பாங்காக் ,மேற்கிந்திய தீவுகள், மெக்ஸிகோ, வெனிசுலா, துனிஸ், கியூபா ஆகிய நாடுகளில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.