×

போலி ஜி.எஸ்.டி பில்… ரூ.600 கோடி மோசடி செய்த மூன்று நிறுவனங்கள்!

ஜி.எஸ்.டி தொகையைப் பெறுவதற்காக போலி ஜி.எஸ்.டி பில் தயாரித்து மோசடி செய்ததாக மூன்று நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் இயங்கி வரும் பார்ச்சூன் கிராபிக்ஸ் லிமிடெட், ரீமா பாலிசெம் பிரைவேட் லிமிடெட், கணபதி எண்டர்பிரைசஸ் ஆகியவை எந்த ஒரு பொருளையும் தயாரித்து ஏற்றுமதி செய்யாமலேயே ஜி.எஸ்.டி பில்களை தயாரித்து சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதை ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று
 

ஜி.எஸ்.டி தொகையைப் பெறுவதற்காக போலி ஜி.எஸ்.டி பில் தயாரித்து மோசடி செய்ததாக மூன்று நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் பல இடங்களில் இயங்கி வரும் பார்ச்சூன் கிராபிக்ஸ் லிமிடெட், ரீமா பாலிசெம் பிரைவேட் லிமிடெட், கணபதி எண்டர்பிரைசஸ் ஆகியவை எந்த ஒரு பொருளையும் தயாரித்து ஏற்றுமதி செய்யாமலேயே ஜி.எஸ்.டி பில்களை தயாரித்து சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் ரூ.600 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதை ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று நிறுவனங்களும் எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்யாமல் இன்வாய்ஸ் எனப்படும் விற்பனை செய்ததற்கான ரசீதை மட்டும் போலியாக உருவாக்கியுள்ளன. ரூ.4100 கோடி அளவுக்கு போலியான பில்களை தயாரித்து ரூ.600 கோடி அளவுக்கு முறைகேடு செய்ய முயன்றுள்ளனர். அனன்யா எக்சீம் என்ற ஒரு நிறுவனத்தை ஆய்வு செய்தபோது இந்த நிறுவனங்கள் முறைகேடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இந்த நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.