×

இனி பேஸ்புக்கில் புகார் தெரிவிக்க இவரை தொடர்புகொள்ளலாம்!

சமூக ஊடக நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும் போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள். இந்த விதிகள் பிப்ரவாரி 25ஆம் தேதியில் அறிவிக்கப்பட்டது. விதிகளுக்கிணங்க மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி மே 25ஆம்
 

சமூக ஊடக நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும் போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள். இந்த விதிகள் பிப்ரவாரி 25ஆம் தேதியில் அறிவிக்கப்பட்டது. விதிகளுக்கிணங்க மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி மே 25ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்தது.

மூன்று மாத கால இடைவெளியில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. நெட்டிசன்கள் வெலவெலத்து போனார்கள். மத்திய அரசு தரப்பில் அழுத்தம் வந்ததால் ட்விட்டரை தவிர்த்து மற்ற சமூக வலைதளங்கள் புதிய விதிகளுடன் உடன்படுவதாக அறிவித்தன. ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

மத்திய அரசின் விதிகளில் மிக முக்கியமானது புகார் அதிகாரி நியமனம். 50 லட்சத்துக்கும் மேல் பயனாளர்கள் உள்ள சமூக ஊடகங்கள் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த அதிகாரிகள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இவர்களைப் பயனாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவையும் வழங்க வேண்டும். பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரியை பேஸ்புக் தனது இணையதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.