×

கர்நாடகா: குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட மிகவும் அரிய வகை அல்பினோ மலைப்பாம்பு

பன்ட்வால்: கர்நாடகாவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மிகவும் அரிய வகை அல்பினோ பாம்பு பிடிபட்டது. கர்நாடகாவின் பன்ட்வாலில் உள்ள குடியிருப்புக்குள் மிகவும் அரிதான வெள்ளை நிற அல்பினோ வகை மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மலைப்பாம்பு குறித்து உள்ளூர்வாசிகள் பாம்பு பிடிக்கும் நபரான கிரணுக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரண் ஒரு வீட்டிற்குள் இருந்த அல்பினோ பாம்பை லாவகமாக கையால் பிடித்து தூக்கினார். இதையடுத்து அந்த மலைப்பாம்பை வன அலுவலர்களிடம் கிரண் ஒப்படைத்தார்.
 

பன்ட்வால்: கர்நாடகாவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மிகவும் அரிய வகை அல்பினோ பாம்பு பிடிபட்டது.

கர்நாடகாவின் பன்ட்வாலில் உள்ள குடியிருப்புக்குள் மிகவும் அரிதான வெள்ளை நிற அல்பினோ வகை மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மலைப்பாம்பு குறித்து உள்ளூர்வாசிகள் பாம்பு பிடிக்கும் நபரான கிரணுக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரண் ஒரு வீட்டிற்குள் இருந்த அல்பினோ பாம்பை லாவகமாக கையால் பிடித்து தூக்கினார். இதையடுத்து அந்த மலைப்பாம்பை வன அலுவலர்களிடம் கிரண் ஒப்படைத்தார். இந்த மலைப்பாம்பு மங்களூருவிலுள்ள பிலிகுலா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளது.