×

பார்சலில் வந்த வெடிகள்- லாரியில் இருந்து இறக்கும் போது கீழே போட்டதில் வெடித்துச் சிதறியது

 

ஆந்திராவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது  வெடித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

 
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில் வெங்காய வெடி இருப்பதை அறியாமல் வழக்கம்போல் மூட்டைகளை இறக்குவது போன்று   கீழே போட்டார். உடனடியாக அந்த மூட்டைக்குள் இருந்து வெங்காய வெடிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின.