☰
×

செல்போன் வெடித்து இளைஞர் பலி

 

பைக்கில் சென்று கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததால் கீழே விழுந்து இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில், 40 வயதான ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அவரது மொபைலின் பேட்டரி  வெடித்ததில் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இறந்தவர் விகாஸ் அன்டல், ரஹ்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விகாஸ் கைக்கேரியில் உள்ள உத்தம் சர்க்கரை ஆலையில் டோக்கன் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் ஆறு வயது மகள், மூன்று வயது மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

விகாஸின் அண்டை வீட்டுக்காரரான சைலேந்திர குமார் அளித்த தகவலின்படி, மஜ்ரா கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தனது தாயை இறக்கிவிட்டு, தன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் இருந்த காவல்துறையினர், சிகிச்சைக்காக விகாஸை மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.