×

தப்பியோடிய கைதி : கொரோனா இருப்பது தெரிந்ததும் தானாக வந்து மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம்!

புதுச்சேரியில் பைக் திருட்டு வழக்கில் ரமணா என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு ரமணா மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரமணாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார்
 

புதுச்சேரியில் பைக் திருட்டு வழக்கில் ரமணா என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு ரமணா மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரமணாவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ரமணா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் விழுப்புரம் வந்து பார்த்த நிலையில் அவர் உறவினர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.

இதையடுத்து மீண்டும் உறவினர் வீட்டிற்கு வந்த ரமணாவிடம் அவருக்கு கொரோனா உள்ளதாக உறவினர்கள் சொன்ன நிலையில் குற்றவாளி ரமணா மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கொரோனா சிகிச்சைக்காக சேர்ந்தார். தற்போது ரமணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.