☰
×

சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே ஏற்பட்ட திடீர் மாரடைப்பு- பரிதாபமாக பலியான ஊழியர் 

 

பெங்களூருவில் உணவகத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வாலிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவின் சன்னராயப்பட்டணத்தைச் சேர்ந்த 42 வயதான  சந்துரு என்பவர் கொட்டிகெரேயில் உள்ள குரு கிரீன்ஸ் உணவகத்தில் காசாளராக பணியாற்றிவருக்கிறார்.  இந்நிலையில் அதே உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சில கணங்களில், மாரடைப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் மேஜையின் மீது குப்புற சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

In a tragic incident, a 42-year-old man died after suffering a suspected heart attack while having his meal at a family restaurant in Gottigere, Bengaluru.

The incident, which was captured on the restaurant's CCTV camera, occurred on October 30 at around 11:40 am.

The deceased… pic.twitter.com/J9LERAYlQ2

— Hate Detector 🔍 (@HateDetectors) October 31, 2026


இந்தச் சம்பவத்தைக் கண்ட உணவக ஊழியர்கள் உடனடியாக அவருக்கு உதவ விரைந்தனர். உணவகப் பணியாளர்கள் உடனடியாக அவரது முகத்தில் நீரை தெளித்து, முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் சுயநினைவை பெறவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சந்துருவைக் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்துருவின் மரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்தச் சம்பவம், அக்டோபர் 30 அன்று காலை சுமார் 11:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது.