×

வங்கி கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்!

கொரோனா காலத்தில் மக்கள் பலர் இஎம்ஐ கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். ஏற்கனவே மக்கள் கஷ்டப்பட்டு வரும் சூழலில் இஎம்ஐயை செலுத்த வங்கிகள் வற்புறுத்துவதாகவும் கொரோனா காலத்தில் செலுத்தாமல் இருந்து இஎம்ஐ வட்டிக்கு வட்டி போடுவதாகவும் புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு வங்கிக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த
 

கொரோனா காலத்தில் மக்கள் பலர் இஎம்ஐ கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். ஏற்கனவே மக்கள் கஷ்டப்பட்டு வரும் சூழலில் இஎம்ஐயை செலுத்த வங்கிகள் வற்புறுத்துவதாகவும் கொரோனா காலத்தில் செலுத்தாமல் இருந்து இஎம்ஐ வட்டிக்கு வட்டி போடுவதாகவும் புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு வங்கிக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, வங்கி கடனுக்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டிக்கு வட்டி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உரிமை இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், எல்லா துறையிலும் பாதிப்பு இருப்பதாகவும் ஆகஸ்ட் 31 வரை இஎம்ஐ கட்டாதோர் கடனை செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் செப்.6 ஆம் தேதி துறை ரீதியான குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.