×

இந்திய பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்தார் எலான் மஸ்க்

 

இந்திய பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்தார் எலான் மஸ்க்.

டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்யவும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் 22ம் தேதி எலான் மஸ்க் இந்தியா வர இருந்த நிலையில் அப்பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை ஒத்திவைப்பதாகவும் வேறொரு நாளில் இந்தியா வர ஆவலுடன் இருப்பதாகவும் மஸ்க் பதிவிட்டுள்ளார்.