×

அதிர்ச்சி சம்பவம்... எருமை மேய்ச்சலுக்கு சென்ற மூதாட்டியை கொன்ற குரங்கு கூட்டம்

 

எருமை மேய்ச்சலுக்கு சென்ற முதாட்டியை குரங்குகள் கூட்டம் தாக்கி கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், பிரதிபாடு மண்டலம், பெட்டிபாலம் கிராமத்தைச் சேர்ந்த தனபோயா சின்னபுல்லி (65) என்பவருக்கு மூன்று ஏக்கர் முந்திரித் தோட்டம் உள்ளது. அவர் தனது மகள் லட்சுமியுடன் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில்  சனிக்கிழமை காலை, சின்னபுல்லி வயலில் எருமைகளை மேய்க்கச் சென்று மீண்டும் மாலை வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தபோது திடீரென 20 குரங்குகள் கூட்டம் அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயங்கள் காரணமாக சின்னபுல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கிராமத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அவற்றைப் பிடித்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மாறு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றும், அதனால்தான் தற்போது  உயிரிழந்துள்ளார் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். தற்போது நாடு முழுவதும் குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு காரணம் வன வளங்கள் , வனப்பரப்பு குறைந்து வருவதால், குரங்குகள் உணவுக்காக கிராமங்களைச் தேடி வருகின்றன. இதன் விளைவாக, அவை விவசாய பயிர்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிகாரிகள் காடுகளை அதிகரிக்காவிட்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.