×

முதியோர்களே சுதந்திர காற்றை சுவாசிக்க ரெடியா? – இதோ மத்திய அரசு அளித்த இனிப்பான செய்தி!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா 2019ஆம் ஆண்டில் தொடங்கி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதரம், தொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்கையை இழந்து பலரும் தவித்துவருகின்றனர். குறிப்பாக இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மூத்த குடிமக்கள் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் கவனத்திற்கு வராமல் போன பாதிப்பு முதியோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே. கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் குழந்தைகள், கர்ப்பிணிகள்,
 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா 2019ஆம் ஆண்டில் தொடங்கி மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதரம், தொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்கையை இழந்து பலரும் தவித்துவருகின்றனர். குறிப்பாக இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மூத்த குடிமக்கள் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் கவனத்திற்கு வராமல் போன பாதிப்பு முதியோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே.

கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் தான் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. நாட்டில் கொரோனாவை வென்ற 90, 100, 105 வயதான முதியவர்கள் என பல்வேறு செய்திகளை அறிந்திருப்போம். ஆனால் கொரோனாவால் எத்தனை முதியவர்கள் உயிரிழந்தார்கள் என்பதை நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாவில்லை. இந்த நோய்த் தொற்றானது மற்றவர்களைக் காட்டிலும் முதியவர்களுக்கு அதிகமான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிலும் முதியவர்களுக்கு ஏற்கனவே வேறு இணை நோய்கள் இருந்து விட்டால் கொரோனா அவர்களைப் பாடாய் படுத்திவிடும். எனவே முதியவர்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க அவர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று முதியவர்களிடம் பயத்தையும் மனஅழுத்தத்தையும் அதிகரிக்க செய்தது. எப்போது இந்த கொரோனா முடிவுக்குவரும்; நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும் என ஆவலோடு காத்திருந்த மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு இனிப்பான தகவலை அளித்துள்ளது.

ஆம் முதியவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணை நோய்கள் இல்லாதவர்களும், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்ட முதியவர்களும் இனி மாஸ்க் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுவெளியில் நடமாடலாம் என கூறியுள்ளது. அதேசமயம் கூட்டநெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதை மட்டும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.