×

ஜி.எஸ்.டி-க்கு போட்டியாக எடியூரப்பா மகன் வசூலிக்கும் வி.எஸ்.டி! – கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கதறல்

கர்நாடகத்தில் ஜி.எஸ்.டி-க்கு போட்டியாக எடியூரப்பா மகன் விஜயேந்திரா அரசுத் திட்டங்களில் 15 சதவிகிதம் அளவுக்கு வி.எஸ்.டி வசூலிப்பதாகவும், ரூ.5000 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுக்கு பெயர் போனவர். அமித்ஷா ஒரு முறை மேடையிலேயே எதிர்க்கட்சியை விமர்சிப்பதாக எண்ணி எடியூரப்பாவை ஊழல்வாதி என்று வர்ணித்த சம்பவம் எல்லாம் நடந்தது உண்டு. தற்போது அவர் முதல்வர் ஆனதற்கு பிறகு அவரது மகன் கமிஷன் வேட்டையாடி வருவதாக சொந்தக்
 


கர்நாடகத்தில் ஜி.எஸ்.டி-க்கு போட்டியாக எடியூரப்பா மகன் விஜயேந்திரா அரசுத் திட்டங்களில் 15 சதவிகிதம் அளவுக்கு வி.எஸ்.டி வசூலிப்பதாகவும், ரூ.5000 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுக்கு பெயர் போனவர். அமித்ஷா ஒரு முறை மேடையிலேயே எதிர்க்கட்சியை விமர்சிப்பதாக எண்ணி எடியூரப்பாவை ஊழல்வாதி என்று வர்ணித்த சம்பவம் எல்லாம் நடந்தது உண்டு. தற்போது அவர் முதல்வர் ஆனதற்கு பிறகு அவரது மகன் கமிஷன் வேட்டையாடி வருவதாக சொந்தக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இணைந்து பா.ஜ.க தலைமைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் பி.ஒய்.விஜயேந்திரரா தனியாக அரசாங்கத்தையே நடத்துகிறார். கர்நாடக முதல்வரை விட அதிகாரம் பெற்ற சூப்பர் முதல்வராக அவர் உள்ளார். அனைத்து அமைச்சகத்துக்கும் பொறுப்பாளராக விஜயேந்திரா நடந்துகொள்கிறார். ஓராண்டில் ரூ.5000 கோடி அளவுக்கு அவர் வசூல் செய்துள்ளார். ஜி.எஸ்.டி-யுடன் போட்டி போடும் அளவுக்கு வி.எஸ்.டி (விஜயேந்திரா சர்வீஸ் டேக்ஸ்) அனைத்து அரசாங்கத் திட்டங்களிலும் 15 சதவிகிதம் என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.


விஜயேந்திராவின் குழுவில் 31 பேர் உள்ளனர். ஆளுங்கட்சியினர், அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், உறவினர்கள் என்று அந்த குழு நிறைந்துள்ளது. இந்த செயல்பாடு கட்சியின் மதிப்பைக் குலைத்துவிடும். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.


பா.ஜ.க தங்களைத் தேசக் காவலர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள் என்று வெளியே பேசிக்கொள்கின்றனர். ஆனால், தேச விரோத செயல்கள், அபின் கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அதிக அளவில் ஆளாகி வருகின்றனர். தற்போது கர்நாடக முதல்வருக்கு எதிராக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களே புகார் கூறியுள்ளனர். பா.ஜ.க-வில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறிக்கொண்டு அடுத்த முதல்வராக விஜயேந்திராவை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கட்சியனர் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.