×

வங்கதேசத்திலிருந்து கொல்கத்தா வரை நில அதிர்வு - மிசோரமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 

மிசோரம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டும். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது. மாநிலத்திலுள்ள தென்சால் பகுதியிலிருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதன் ஆழம் 12 கிலோமீட்டர். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தா, திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அதேபோல வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியிலிருந்து கிழக்கே 183 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் கூறி வருகின்றனர். அதாவது சிட்டகாங்கிலிருந்து கொல்கத்தா வரையிலான 450.62 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  


சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை விலகவில்லை. அதேபோல 5.53 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் பிற பகுதிகளிலும் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது.