×

மேகாலயாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவு.. 

 

மேகாலயாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.  

அண்மையில்  துருக்கி , சிரியாவில்  சக்த்கிவாய்ந்த  நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் இதுவரை 51 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம், கட்டிடக் குவியல்கள், தோண்ட தோண்ட மனித சடலங்கள் என இந்த நிலநடுக்கம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்திலிருந்தே  மீண்டு வராத சூழலில் உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம்  ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ஜப்பான்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினியா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. \

இதேபோல் இந்தியாவிலும் ஆங்காங்கே நில்நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அசாம், குஜராத்,  ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனையடுத்து  மேகாலயாவில்  இன்று காலை 9.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன்   நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை..