×

"E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" - நிதின் கட்கரி

 

நாட்டில் விற்பனை செய்யப்படும் E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் பழைய வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனத்தின் என்ஜினுக்கும் பாதிப்போ அல்லது தேய்மானமோ ஏற்படுவதில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இத்திட்டத்தின் மூலம் நாட்டிற்கு ரூ.1.98 லட்சம் கோடி அந்நியச் செலவாணி சேமிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். வாகன உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நடத்திய விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே E20 பெட்ரோல் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கோடிக்கும் அதிகமான கார்கள் E20 பெட்ரோலில் இயங்கி வருகின்றன. வாகனச் சேவை மையங்களின் ஆய்வில், எத்தனால் கலப்பால் என்ஜின் பழுது ஏற்பட்டதாக எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை என  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.