×

வாராக்கடன் தள்ளுபடி…. மோடி ஆட்சியில் தாராளம்…. 4 வருஷத்துல ரூ.7.94 லட்சம் கோடி தள்ளுபடி…

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பல்வேறு வங்கிகள் மொத்தம் ரூ.7.94 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. இது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சி காலத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாம். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் பெருநிறுவனங்களின் வாராக் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் மோடியின் ஆட்சி
 

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பல்வேறு வங்கிகள் மொத்தம் ரூ.7.94 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. இது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சி காலத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாம்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் பெருநிறுவனங்களின் வாராக் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் மோடியின் ஆட்சி காலத்தில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளின் வாராக்டன்

புனேவை சேர்ந்த தொழிலதிபர் பிரபுல் சர்தா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் தொடர்பாக தகவல்களை கேட்டு இருந்தார். இதனையடுத்து அது தொடர்பான புள்ளிவிவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அவருக்கு கிடைத்தது. அதன் புள்ளிவிவரங்களின்படி, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு (2004-14) ஆட்சி காலத்தில் மொத்தம் ரூ.2.20 லட்சம் கோடி வாராக்கடனை பொதுத்துறை வங்கிகள் உள்பட பல்வேறு வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

காங்கிரஸ்

அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 5 ஆண்டு (2015-19) ஆட்சி காலத்தில் பல்வேறு வங்கிகள் மொத்தம் ரூ.7.94 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. அதாவது காங்கிரஸின் 10 ஆண்டு ஆட்சி காலத்தை காட்டிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 5 ஆட்சி காலத்தில் வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் 3 மடங்கு அதிகமாகும்.