#BREAKING துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை - சொகுசு கார்கள் பறிமுதல்
நடிகர்கள் துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்களின் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
’அப்ரேஷன் நும்க்கூர்’ என்ற திட்டத்தின்கீழ், பூடானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, வரியை தவிர்க்க பழைய வாகனங்களாக பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான விசாரணையில் சில திரை நட்சத்திரங்கள் பெயர்கள் இருக்கும் நிலையில், துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அதனை விற்பனை செய்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டியின் வீட்டில் 10 கார்கள் இருந்தன. அதில் 8 கார்கள் பழமையான கார்களாகும். துல்கர் சல்மானின் டிஃபெண்டர் உள்ளிட்ட இரு கார்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டன.