×

படிக்க சொன்ன தந்தை -குடிக்க போன மகன் -கடைசியில் நடந்த சோகம் .

ஒரு மகன் குடிக்க காசு கொடுக்காத தந்தையை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உத்திர பிரதேச மாநிலம் படவுனில் ஹஸ்ரத்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாக்சேனா கிராமத்தில் விகாஸ் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அவரின் தந்தை 44 வயதான துர்கபால் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் ஹோம் கார்டாக வேலை பார்த்து வந்தார் .விகாஸ் அவரின் தந்தைக்கு கடைசி மகன் ஆவார் .இந்நிலையில் விகாஸ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரின்
 


ஒரு மகன் குடிக்க காசு கொடுக்காத தந்தையை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


உத்திர பிரதேச மாநிலம் படவுனில் ஹஸ்ரத்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாக்சேனா கிராமத்தில் விகாஸ் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அவரின் தந்தை 44 வயதான துர்கபால் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் ஹோம் கார்டாக வேலை பார்த்து வந்தார் .விகாஸ் அவரின் தந்தைக்கு கடைசி மகன் ஆவார் .இந்நிலையில் விகாஸ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரின் தந்தையிடம் சண்டை போட்டுள்ளார் .மேலும் அடிக்கடி அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்க்கு சென்று குடிக்க பணம் கேட்டு அவரோடு தகராறில் ஈடுபட்டுள்ளார் .
அதனால் அவரின் தந்தை அவரை பலமுறை கண்டித்து அவரை ஒழுங்காக படிக்க சொன்னார் .ஆனால் அவரின் சொல்லை கேட்காத விகாஸ் கடந்த வாரம் மீண்டும் அவரின் தந்தை வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று அவரிடம் குடிக்க பணம் கேட்டார் .இதனால் அவரின் தந்தை மிகவும் கோபமுற்று அவரை திட்டியுள்ளார் .இதனால் கோபமுற்ற விகாஸ் குடிபோதையில் அங்கிருந்த ஒரு செங்கல்லை எடுத்து அவரின் தந்தையின் தலையை தாக்கினார் .இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன அவர் அங்கேயே மயங்கி விழுந்தார் .அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டளுக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவரை பரிசோதித்த டாகடர் அவர் இறந்து விட்டதாக கூறினர் .பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர் .பிறகு போலீசார் அவரின் மகன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் .