×

பறை இசைத்த நடிகை ரோஜா -வைரலாகும் வீடியோ

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற தொகுதியின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அவ்வப்போறு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பல்வேறு விசயங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அண்மையில் இவர் கபடி போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கியதோடு அல்லாமல் அவர்களுடன் கபடியும் ஆடி உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ வைரலானது. அதுபோலவே இப்போது, ரோஜா பறை அடிக்கும் வீடியோவும் வைரலாகி
 

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற தொகுதியின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு அவ்வப்போறு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பல்வேறு விசயங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அண்மையில் இவர் கபடி போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கியதோடு அல்லாமல் அவர்களுடன் கபடியும் ஆடி உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ வைரலானது. அதுபோலவே இப்போது, ரோஜா பறை அடிக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

தனது தொகுதியில் வசிக்கும் பறை இசைக்கலைஞர்களுக்கு அவர் பறை இசைக்கருவிகளை இலவசமாக வழங்கியவர், அந்த இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து அவரும் பறை இசைத்தார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.