காவி உடையில் சாமியாராக மாறிய எம்.பி- உண்டியலில் பணம் போட்ட ராகுல்
அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் விநோத போராட்டம்..!
— TNTalks (@tntalksofficial) July 31, 2026
அயோத்தி ராமர் கோயில் மோசடி குறித்து நாடகம்..!#TNtalks |#AyodhyaRam |#Temple |#protest pic.twitter.com/DIvzl4HzPG
எதிர்க்கட்சிகளின் விநோத போராட்டம்..!
— TNTalks (@tntalksofficial) July 31, 2026
அயோத்தி ராமர் கோயில் மோசடி குறித்து நாடகம்..!#TNtalks |#AyodhyaRam |#Temple |#protest pic.twitter.com/DIvzl4HzPG
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டைக் கண்டித்துத் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நன்கொடை முறைகேட்டைக் சுட்டிக்காட்டும் விதமாகக் கவனத்தை ஈர்க்கும் வினோத நாடகப் போராட்டம் ஒன்றை எதிர்க்கட்சியினர் அரங்கேற்றினர். சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் பூசாரி வேடமிட்டுத் தோன்ற, அங்கிருந்த நன்கொடைப் பெட்டியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பணத்தைப் போட்டனர். தொடர்ந்து, பூசாரி வேடத்தில் இருந்த பப்பு யாதவ் அந்த நன்கொடைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடுவது போல நடித்துக் காட்டினார். 'நன்கொடைத் திருடர்கள்' என்ற முழக்கங்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.