×

4ஜி நெட்வொர்க் மேம்படுத்துவதற்கான டெண்டரில் சீன நிறுவனங்களை அனுமதிக்காதீங்க…. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு துறை உத்தரவு..

கல்வான் பள்ளதாக்கில் சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு களம் இறங்கி விட்டது. சீனாவுக்கு பொருளாதார ரீதியாக அடிக்கும் கொடுக்கும் வகையில், முதல் நடவடிக்கையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாயிலாக எடுக்க ஆரம்பித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் நெட்வொர்க்கை 4ஜியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், 4ஜி நெட்வொர்க்காக மேம்படுத்துவதற்காக வழங்கும் டெண்டரில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம்
 

கல்வான் பள்ளதாக்கில் சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு களம் இறங்கி விட்டது. சீனாவுக்கு பொருளாதார ரீதியாக அடிக்கும் கொடுக்கும் வகையில், முதல் நடவடிக்கையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாயிலாக எடுக்க ஆரம்பித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் நெட்வொர்க்கை 4ஜியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், 4ஜி நெட்வொர்க்காக மேம்படுத்துவதற்காக வழங்கும் டெண்டரில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சீன நிறுவனங்களிடமிருந்து உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் என மற்ற இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும் இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.

மேலும், இந்தியாவில் 5ஜி சேவை வெளியீட்டில் பங்கேற்க சீன நிறுவனமான ஹூவாயை மத்திய அரசு அனுமதிக்காது என்பது உறுதியாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பிய போதும், 2019ல் 5ஜி நெட்வொர்க் சோதனைகளை மேற்கொள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்க்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.