×

தினசரி இறப்பு பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதலே இருந்து வருகிறது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. ஆயினும் சில வட இந்திய மாநிலங்களில் கொரோனா 2-ம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது எனும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 4 லட்சத்துக்கும் கீழ் (3,96,729) குறைந்து விட்டது. இதற்கு முன்
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதலே இருந்து வருகிறது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது.

ஆயினும் சில வட இந்திய மாநிலங்களில் கொரோனா 2-ம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது எனும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில், கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 4 லட்சத்துக்கும் கீழ் (3,96,729) குறைந்து விட்டது. இதற்கு முன் கடந்த ஜூலை 20ம் தேதி அன்று, கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,459 ஆக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில், 32,981 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருதரப்பினர் இடையேயான வித்தியாசம் 6,128 ஆக உள்ளது.

புதிய பாதிப்பை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் வீதம் 94.45 சதவீதமாக இன்று அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 91,39,901-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். 157 நாட்களுக்குப்பின் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 400க்கு கீழ் குறைந்துள்ளது.

இந்திய அளவில் தினசரி கொரோனா அப்டேட்டில் மாநில அளவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களில் இல்லை. முதல் இடத்தில் கேரளாவும், இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

தினசரி கொரோனா குணமடையும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 9-வது இடத்தில் உள்ளது.

தினசரி கொரோனா மரணங்கள் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 9-வது இடத்தில் உள்ளது.