×

ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா? #Corona

கொரோனா உலுக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதிலும் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. கொவிட் 19-க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 10 லட்சத்திற்கும் குறைவாக பராமரிக்கும் போக்கை, இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து 10வது நாளாக, கொவிட்டுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. ஒவ்வொரு நாளும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், குணமடைவோர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 85,376 பேர்
 

கொரோனா உலுக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதிலும் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது.

கொவிட் 19-க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 10 லட்சத்திற்கும் குறைவாக பராமரிக்கும் போக்கை, இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து 10வது நாளாக, கொவிட்டுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், குணமடைவோர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 85,376 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 52,73,201 ஆக உள்ளது. குணமடைவோர் வீதம் 83.53%-மாக உள்ளது.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குணமடைந்தவர்களில் கடைசி 10 லட்சம் பேர் கடந்த 12 நாட்களில் குணமடைந்தவர்கள்.

குணமடைந்தவர்களில் 77% பேர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 76% பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸஸ் உள்ள மாநிலப் பட்டியலில், முதல் இடத்தில் மகாராஷ்ராவும், இரண்டாம் இடத்தில் கர்நாடகாவும், மூன்றாம் இடத்தில் கேரளாவும், நான்காம் இடத்தில் ஆந்திரப் பிரதேசமும், ஐந்தாம் இடத்தில் உத்திரப் பிரதேசமும், ஆறாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன.
ஏழாம் இடத்தில் அசாமும், எட்டாம் இடத்தில் ஒடிசாவும், ஒன்பதாம் இடத்தில் சட்டீஸ்கரும், பத்தாம் இடத்தில் தெலங்கானாவும் உள்ளன.

தொடந்து சில மாதங்களாக ஐந்தாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது ஆறாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.