சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடி
சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடி
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கவிழ்க்க சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திக் விஜய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங், “அவர்கள் எஃப்.ஐ.ஆர் போட்டதில் கவலையில்லை, ஆனால், இந்த வீடியோவை யார் எடிட் செய்து வெளியிட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டறிய வேண்டும்” என்றார்.